நடந்து முடிந்திருக்கிற நாடாளுமன்றத் தேர்தல், தமிழக அரசியலில்
பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறது. அவற்றில் ஒன்று.
காங்கிரசின் எழுச்சி.
காமராசருக்குப் பிறகு, தமிழக ஆளுங்கட்சி என்ற அடையாளத்தை காங்கிரஸ்
இழந்திருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொருத்தவரை அக்கட்சி, குறிப்பிடத்தக்க
வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்றே வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர்- கருணாநிதி ஆகிய இரு துருவங்கள். ஆனால், இருவரோடும்
இந்திரா காந்தி கூட்டணி வைத்து வெற்றி வாகை சூடியிருக்கிறார். ராஜீவ் காந்தியின் மரணம்
நிகழ்ந்த 1991 தேர்தலில் ராஜீவ்காந்தி – ஜெயலலிதா கூட்டணி தமிழகத்தின் அத்தனை தொகுதிகளிலும்
வெற்றி வாகை சூடியது.
இந்த வரிசையில், 2004 இல் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் பெற்ற
வெற்றி மறக்க முடியாதது. ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு இரு துருவங்களாகவே
இருந்த திமுக காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் இணைந்திருந்தன. இடைப்பட்ட காலத்தில்
காங்கிரஸார் திமுகவை தீண்டத்தகாத கட்சியாகவே பார்த்தனர். ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்காகவே
அழுத்தம் கொடுத்து, அது நிகழாததால் குஜ்ராலின் ஆட்சியையே கவிழ்த்தது காங்கிரஸ்.
ஆனாலும், காலத்தின் தேவை இரு கட்சிகளையும் இணைத்து வைத்தது.
2004 தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும்
மாபெரும் வெற்றியைப் பெற்றன. இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட வாஜ்பாய் – ஜெயலலிதா
கூட்டணி தோல்வியைத் தழுவியது.
2004 தேர்தல் மட்டுமல்ல. 2009 தேர்தலிலும் இக்கூட்டணி வெற்றி
வாகை சூடியது. இடையில் 2006-இல் நிகழ்ந்த சட்டப்பேரவை தேர்தலிலும், திமுகவோடு காங்கிரஸ்
கட்சி உறுப்பினர்கள் கணிசமான வெற்றியைப் பெற்றனர். திமுகவுக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து
தன் ஆதரவை வழங்கி வந்தது. மத்தியில் தங்கள் அரசில் அமைச்சரவையில் பங்கேற்கும் திமுக
மாநிலத்தில் தங்கள் உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுக்க வேண்டுமென்று, காங்கிரஸ்
தலைவர்கள் அவ்வப்போது குரல் எழுப்பி வந்தனர். ஆனாலும், அவர்களுடைய ஆசை இறுதி வரைக்கும்
நிறைவேறாமலேயே போனது.
இதற்கிடையில், திமுக மற்றும் காங்கிரஸிற்கிடையேயான உறவு தொடர்ந்து
மோசமடைந்து கொண்டே வந்தது. 2 ஜி விவகாரத்தால் திமுகவோடு சேர்த்து காங்கிரசிற்கும் கடும்
நெருக்கடி உண்டானது. அந்த விவகாரத்தால் திமுகவால் காங்கிரசிற்கு கெட்டப்பெயர் உண்டானது
என்றால், ஈழப்போர் விவகாரத்தால், காங்கிரசால் திமுகவிற்கு கடுமையான கெட்டப்பெயர் உண்டானது.
2004-இல் ஒட்டுமொத்தமாய் உயர்த்திய அதே தமிழகம், 2014 தேர்தலில்



Post a Comment